பாராளுமன்ற 𝐂𝐎𝐏𝐀 மதிப்பீட்டில் அக்கரைப்பற்று மாநகர சபை மீண்டும் முன்னிலை
13/02/2024
பாராளுமன்ற 𝐂𝐎𝐏𝐀 மதிப்பீட்டில் அக்கரைப்பற்று மாநகர சபை மீண்டும் முன்னிலை
அக்கரைப்பற்று மாநகர சபையானது தொடர்ச்சியாக இரண்டாவது வருடமும் இலங்கை பாராளுமன்றத்தின் பொது கணக்குகள் குழுவினால் (𝐂𝐎𝐏𝐀) நடத்தப்படும் கணக்காய்வு மதிப்பீட்டின் அடிப்படையில் இம்முறையும் அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்படும் நூறு அரச நிறுவனங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் அகில இலங்கை ரீதியாக மாநகர சபை பிரிவில் இம்முறை இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.
மேலும் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு மாநகர சபை இதுவாகும் என்பதுடன் அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரே ஒரு அரச நிறுவனமும் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அண்மைக் காலமாக மாநகர ஆணையாளர் ATM. றாபி அவர்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும் மாநகர சபையின் அலுவலர்களின் முழுமையான ஒத்துழைப்புடனும் தொடர்ச்சியாக இவ்வாறான அடைவுகளை அக்கரைப்பற்று மாநகர சபை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது .
இவ்வாறான அடைவுகளை பெற்றுக் கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் மாநகர ஆணையாளர், செயலாளர், மாநகர சபையின் பிரிவுத் தலைவர்கள், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ சேவை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் இவ்விடயத்தில் மாநகர ஆணையாளருடன் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நிதிப் பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் MAM. றியாத் அவர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.